உலகம்

தாய்லாந்தின் கஞ்சா இலையுடன் பிட்சா விற்பனை செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி!

தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான “கிரேஸி ஹேப்பி பிட்சா” தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இது இந்த மாதம் முதல் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் 12 வயதிற்குட்பட்ட எவருக்கும் சட்டப்பூர்வமாக விளம்பரம் செய்யவோ அல்லது விற்கவோ முடியாது.

தாய்லாந்தில் உள்ள பிட்சா நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இதன் விற்பனை மந்தமாகவே உள்ளதாக பீட்சா நிறுவனம் கூறியுள்ளது. செவ்வாய்கிழமை நிறுவனம் வாங்கிய கஞ்சா இலைகளில் ஐந்தில் ஒரு பகுதியை எறிய வேண்டி ஏற்பட்டதாக கூறுகின்றது.

பீட்சாவுடன் கஞ்சாவை சுவைப்பதால் கொஞ்சம் தூக்கம் வருவதன் காரணமாக மக்கள் அதிகம் அதனை விருப்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக தாம் பெருமை அடைவதாக பீட்சா நிறுவனம் தெரிவிக்கின்றது.

கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது.

மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. கஞ்சா இலை ஒன்றுடன் ஒரு பீட்சாவின் விலை 15 டொலர்கள் இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக 3 டொலர்கள் அறவிடப்படுகின்றது.

“மக்கள் உங்கள் உணவகத்திற்குள் வருவது தமது உணவு மற்றும் சேவைக்காக தவிற கஞ்சாவிற்கு அல்ல.” என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால் அபராதமும் சிறைவாசமும் விதிக்கப்படலாம்.

எனினும் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Hot Topics

Related Articles