உலகம்

ஒமிக்ரோன் அச்சம் காரணமாக தென்னாபிரிக்கா நாடுகளுக்கான விமான சேவைகள் முடக்கம்!

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் உலக நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாறுபாடு தடுப்பூகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு திறனை தோற்கடிக்கும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஆபிரிக்க நாடுகளில் பரவல் அடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால்

இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தும் அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் பலவும்  ஆபிரிக்க நாடுகளுக்கான விமான போக்குவரத்துகளை இடை நிறுத்தி வருகின்றன.

அந்தவகையில் ஒமிக்ரோன் பரவும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, போஸ்ட்வானா, லெசதோ, சிம்பாப்வே, சுவாசிலாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கே இலங்கை இவ்வாறு தடை விதித்துள்ளது.

வெளிநாட்டவர்களைப் போன்றே குறித்த ஆபிரிக்க நாடுகளில் உள்ள இலங்கையர்களும் நாட்டுக்கு வருவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் இருந்து தற்போது இலங்கைக்கு வந்தவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Hot Topics

Related Articles