உலகம்

‘ஒமிக்ரோன்’ அச்சம் – ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதி காண் போட்டி இரத்து!

ஹராரேயில் நடைபெறவிருந்த 2021 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதி காண் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் நிலவும் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் தொற்று அபாயம் காரணமாக ஹோஸ்ட் நாடான ஜிம்பாப்வே உட்பட பல  நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிம்பாப்வேயில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கும் இடையில் இன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தத போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வே உட்பட 6 ஆபிரிக்க நாடுகளில் ‘ஒமிக்ரோன்’ எனும் புதிய கொரோனா திரிவு பரவுகிறது.

மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதி காண் போட்டி இரத்து செய்யப்பட்டதால், உலகக் கிண்ணத்தை நடத்துவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பான தீர்மானத்தை ஐசிசி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Hot Topics

Related Articles