உலகம்

ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் – பிசிசிஐ கட்டுப்படுத்துகிறதா?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ  உணவு கட்டுப்பாட்டு விதித்துள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்திய அணி நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை 3க்கு 0 என கைப்பற்றியது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக இந்திய அணியை தயார் படுத்த  இப்போதே கட்டுப்பாடகள்  விதிக்க பிசிசிஐ ஆரம்பித்து விட்டது.

புதிய கட்டுப்பாடுகளின் படி இந்திய வீரர்களின் உடற்தகுதியை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இந்திய வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை பிசிசிஐ கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்றும், ஹலால் அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

இது சமூக ஊடகங்களில் பலரினாலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

எனினும் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்ததாக வெளியான செய்திக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ‘உணவு விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,’ என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Hot Topics

Related Articles