உலகம்

கொவிட் தொற்றுக்குள்ளான கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்பில் தகவல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது கூறியிருந்தார்

இதையடுத்து தாம் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles