உலகம்

பார்வதி அம்மாளுக்கு “ஜெய்பீம்” படக்குழு உதவி – சூர்யா அறிக்கை!

 

நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பரவலான மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.

கதையில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் நடிகர் சூர்யா ஹீரோவாக நிரூபித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு படத்தயாரிப்பு நிறுவனம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அவரது கோரிக்கையை ஏற்று நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ”மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles