உலகம்

இந்திய சினிமா துறையில் முதல் முறையாக மிகவும் விலை உயர்ந்த கேமரா பீஸ்ட் படத்தில்!

இந்திய சினிமா துறையில் முதல் முறையாக மிகவும் விலை உயர்ந்த ரெட் வி ரேப்டர் கேமரா  பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் தற்போது நடித்துவரும் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிப்பதாகவும், தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பதுதான் படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது.

இதுவரை 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை காஷ்மீரில் எடுக்கத்திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு காரணங்களால் படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், காஷ்மீர், மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை செட்டிங்ஸ் மூலம் ஜார்ஜியாவில் எடுக்கவுள்ளார்களாம்.

இதற்காக படக்குழுவினர் மீண்டும் ஜார்ஜியா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்தியாவில் எந்த ஒரு படத்திலும் பயன்படுத்தாத கேமராவை பீஸ்ட் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மிகவும் விலை உயர்ந்த ரெட் வி ரேப்டர் கேமராவை முதன் முறையாக பீஸ்ட் படத்தில் பயன்படுத்தி உள்ளார்களாம்.

இதுவரை இத்த கேமராவை இந்தியாவில் யாரும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹமாசா அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வகை கேமராக்கள் மிகவும் விலையுயர்ந்த கேமராக்கள் ஆகும்.

-நன்றி சினிமா பேட்டை

Hot Topics

Related Articles