உலகம்

Gamata Sanniwedanaya திட்டத்தின் கீழ் Airtel 4G தொழில்நுட்பத்தை அனுபவிக்க இரத்தினபுரி கிராமபுற மக்களுக்கு சந்தர்ப்பம்

 

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் (TRCSL) இணைந்து செயற்படும் Airtel Lanka தொலைத்தெடர்பு நிறுவனம் Gamata Sanniwedanaya திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புதிய 4G கோபுரத்தை அண்மையில் அமைத்தது.

இந்த முயற்சியின் கீழ் புதிய 4G கோபுரம், இரத்தினபுரி மாவட்டம், உலுப்பிட்டியவில் அமைக்கப்பட்டதுடன், 91 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது, அங்குள்ள மொத்த மக்கள் தொகையான 12,219க்கு மேற்பட்டவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வலையமைப்பில் கவரேஜ் வசதியை வழங்குகிறது. இது கிராமப்புற சமூகங்களின் டிஜிட்டல் மயமாக்கல், தடையற்ற தொலைதூரக் கற்றல் மற்றும் நெகிழ்வான வீட்டிலிருந்தவாறு வேலை செய்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆஷிஷ் சந்திரா, “இரத்தினபுரியில் கோபுரத்தை அமைத்ததன் மூலம், உலுப்பிட்டியில் வசிக்கும் மக்கள் இப்போது எங்களின் உலகத் தரம் வாய்ந்த, buffer free 4G வலைப்பின்னலுக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும். இலங்கையர்களின், குறிப்பாக கையடக்க தொலைபேசி இணைப்புக்கான வசதிகள் இல்லாத பின்தங்கிய கிராமப்புற சமூகத்தினரின் வாழ்க்கையை வளமாக்கும் எங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, TRCSL உடன் தொடர்ந்து எயார்டெல் கூட்டிணைந்திருக்கும்.” என தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 100% வீத கவரேஜை அடைவதை இலக்காகக் கொண்ட ‘Gamata Sanniwedanaya’ திட்டமானது, அனைத்து இலங்கையர்களுக்கும் கையடக்க தொலைபேசி இணைப்புக்கு சமமான வசதிகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற மாவட்டங்களில் குறைந்த கவரேஜ் வசதிகள் இல்லாத டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், எயார்டெல் நாடு முழுவதிலும் புதிய 4G கோபுரங்களை அமைப்பதன் மூலம் அதன் 4G வலையமைப்பை துரிதமாக விரிவாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எயார்டெல் லங்கா தனது 4G கவரேஜை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தும் திட்டம், கிராமப்புறங்கள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் காணப்படும் குறைந்த கவரேஜ் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மூலோபாய ரீதியாக பல திட்டங்களை தீட்டியுள்ளது.

எயார்டெல்லின் மேம்பட்ட 4G வலையமைப்பு, கவரேஜ் மற்றும் திறன் ஆகியவற்றின் உறுதியுடன் ஒரு சிறந்த ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை வழங்குவதுடன், சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்ட உட்புற கவரேஜ் மற்றும் வலுவான சமிக்ஞை கட்டமைப்பையும் வழங்குகிறது. இலங்கை முழுவதும் மொபைல் வலையமைப்பு சேவைகளில் தரத்தை உயர்த்தும் வகையில், Airtel 4G ஆனது buffer free வீடியோக்கள், சிறந்த உட்புற கவரேஜ் மற்றும் Faster Loading வசதிகளையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles