உலகம்

‘Smart Village App’ வணிக வளர்ச்சி மற்றும் மாற்று பொருளாதார அபிவிருத்திக்கு இடமளிக்கின்றது

தொற்றுநோய் நிலைமையின் போது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கிராமங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்களை உணர்ந்துள்ள இலங்கையின் பழமை வாய்ந்த சமூக இயக்கங்களில் ஒன்றான சர்வோதய இயக்கத்தின் நிதியியல் சேவைகள் பிரிவான சர்வோதய அபிவிருத்தி நிதியம், வணிக வளர்ச்சி மற்றும் நிதியியல் பலாபல0ன்களை சிறந்த வகையில் இணைத்து, அவற்றை வலுப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் ‘Smart Village App’ இனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Zoom மற்றும் Google Meets தொழில்நுட்ப தளங்கள் வழியாக நடத்தப்பட்ட கூட்டங்களுடன், கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் தனது டிஜிட்டல்மயமாக்கல் பயணத்தை ஆரம்பித்திருந்த சர்வோதய அபிவிருத்தி நிதியம், ‘Smart Village App’ அறிமுகத்தின் மூலம் நெறிமுறை தவறாத நிதி வசதியை மாற்றியமைப்பதில் அடுத்த படியில் காலடியெடுத்து வைத்துள்ளது.

இச்செயலியின் முக்கிய குறிக்கோள் டிஜிட்டல் தளங்களுக்கு அதிக அணுகலை வழங்குவதன் மூலம் அடிமட்ட சமூகங்களுக்கு நிதி வசதிக்கான அணுகலை வழங்குதல், மற்றும் இதன் மூலம் அவர்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்று தங்கள் வணிகத்தை நடத்தவும் மற்றும் தமது நிதியை நிர்வகிக்கவும் வழிகோலுவதாகும்.

சர்வோதய அபிவிருத்தி நிதியம் ஏற்கனவே 5,400 க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளதுடன், கிராமங்களுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. பாவனைக் கட்டணப் பட்டியல்கள், காப்புறுதி மற்றும் வங்கிச்சேவை, கடன் கொடுப்பனவுகளுக்கான இணைய வழி கட்டணங்களைச் செயல்படுத்த, கையடக்க டிஜிட்டல் சாதனங்களை வழங்கியுள்ளது. 75 சங்கங்கள் மற்றும் அவற்றின் அயற்புற சமூகங்கள் கொண்ட மாதிரி முயற்சியான இதன் முன்னோடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறுகிய காலத்தில் பெரும் ஈடுபாட்டையும் குறிப்பிடத்தக்க நல்விளைவையும் கண்ட முன்னோடி மாதிரித் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு இது ஏனைய சங்கங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கையடக்க டிஜிட்டல் சாதனங்கள், இப்போது ‘Smart Village App’ செயலியை ஏற்கனவே கொண்டவையாக காணப்படுவதுடன், கூடுதலான அளவில் வாடிக்கையாளர்களின் சௌகரியத்தையும் சரியான நேரத்தில் கொடுப்பனவுகளை செலுத்துவதையும் உறுதி செய்வதில் ஒருங்கிணைந்த வகிபாகத்தைக் கொண்டுள்ளன.

இச்செயலி வெகு விரைவில் Google Play மற்றும் Apple app stores இரண்டிலும் கிடைக்கவுள்ளதுடன், பல்வேறு நன்மைகளை வழங்கவுள்ளது. கிராமம் அல்லது சமூக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு இடையே சிறந்த இணைப்பை உறுதி செய்வதிலிருந்து, திறமையான ஆற்றல் பகிர்வினை செயல்படுத்துவது, தயாரிப்புகளைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் போது மிகவும் கட்டமைக்கப்பட்ட விநியோக வலையமைப்பினை செயல்படுத்துதல், நிலைபேறாண்மை கொண்ட நுகர்வு மற்றும் மிக முக்கியமாக உலகளாவிய சந்தையை எட்டுவதற்கு இடமளிக்கிறது.

வரவிருக்கும் செயலியின் அறிமுகம் குறித்து, சர்வோதய அபிவிருத்தி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிலாந்த ஜெயநெத்தி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பொருளாதார சேர்க்கை அரவணைப்பு மற்றும் நிதியியல் சமத்துவத்தை முன்னெடுப்பதற்கு டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளை நாங்கள் நீண்ட காலமாக பார்த்திருக்கிறோம்.

எங்கள் அடுத்த முயற்சியான Smart Village App நிதியியல் கட்டமைப்பினை மாற்றுவதற்கும், குறைந்த வாய்ப்புக்களைக் கொண்டிருந்த மற்றும் குறைவான மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுவருவதற்கும் சாத்தியம் உள்ளது.

இந்த செயலி உள்ளூர் கிராமப்புற தயாரிப்புகளை சர்வதேச அரங்கில் காண்பிக்க உதவுகிறது. அத்துடன் நிதியியல் இணையத்தளங்கள் மற்றும் இணையவழி சந்தைகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் அதிக அணுகலுக்கு இடமளிக்கின்றது.

தொற்றுநோய் நிலைமையின் போது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேசமயம், பரிவர்த்தனைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இதன் மூலமாக முன்னெடுக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.

சர்வோதய அபிவிருத்தி நிதியம் நிதியியல் சேவைகள் துறையில் டிஜிட்டல் இடைவெளியை நிரப்புசதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதுடன், ஒரு வலுவான நிதியியல் சேவைகள் வழங்குநராக உள்ளதில் பெருமை கொள்கிறது.

பகிரப்பட்ட பொருளாதார சூழல் கட்டமைப்பு மூலம் பிரத்தியேகமாக்கப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள் வழியாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இது நவீன டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகிறது.

 

Hot Topics

Related Articles