உலகம்

காங்கோவில் ஒன்பது படகுகள் விபத்து : 100 க்கும் அதிகமானோர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பைரோக்ஸ் என்று அழைக்கப்படும் பாரம்பரிய ஒன்பது மர படகுகளில் 200க்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன.

இதில் படகுகளில் பயணம் செய்த 150க்கும் அதிகமானோரும் நீரில் முழ்கினர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

இரவில் “மோசமான வானிலையால் கூட்ட நெரிசல்” காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாகாண அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles