உலகம்

எல்லையற்ற ஆற்றலுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களாக பெண்கள்!

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் குரல்களை வலுப்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஆண்டு தோறும் குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

“பெண்கள் தங்கள் டிஜிட்டல் யதார்த்தங்களையும், கருத்து சுதந்திரம், மகிழ்ச்சி மற்றும் எல்லையற்ற ஆற்றலுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு வழிகளில் சிறந்து விளங்க வேண்டிய தீர்வுகளை அவர்கள் அறிவார்கள்.

இந்த தலைமுறை பெண்கள் – இனம், பாலினம், மொழி, திறன், பொருளாதார நிலை மற்றும் புவியியல் தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் – அவர்களின் முழு திறனையும் வாழ வழிவகைகளை விரிவுபடுத்தும் அதே வேளையில் இந்த தொழில்நுட்பத் தடங்களின் பன்முகத்தன்மையைப் பெருக்குவோம்.” என ஐநா தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் கருப்பொருள் ‘டிஜிட்டல் தலைமுறை’. பெண்கள் டிஜிட்டல் தளத்தின் யதார்த்தங்களையும், அதில் தங்களது கருத்து சுதந்திரம் மற்றும் எல்லையற்ற ஆற்றலுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு வழிகளில் சிறந்து விளங்கத் தேவையான தீர்வுகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

சர்வதேச பெண்கள் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கனடாவால் ஒரு தீர்மானமாக முதலில் முன்மொழியப்பட்டது. டிசம்பர் 19, 2011 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒக்டோபர் 11, 2012 ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றியது.

Hot Topics

Related Articles