உலகம்

இலங்கையில் தொடரும் விலை அதிகரிப்பு : மதிய உணவு பொதி, தேநீரின் விலைகளை உயர்த்த முடிவு

இலங்கையில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மதிய உணவு பொதி, கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு விலை உயர்வை கருத்தில் கொண்டு, நாளை முதல் மதிய உணவு பொதி, கொத்து, தேநீர் ஆகியவற்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேனீரின் விலை 25 ரூபாவாக விற்பனைசெய்யப்பட உள்ளது.
“எரிவாயு விலையில் பாரிய அதிகரிப்புடன், ஒரு மதிய உணவுப் பொதியின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க வேண்டும், ஆனால் மக்களின் நெறுக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விலைகளை 10 ரூபாவினால் அதிகரித்து நஷ்டத்தை சமாளிக்க முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தை விட ஹோட்டல் உரிமையாளர்கள் மிகவும் மனிதாபிமானமுள்ளவர்கள், என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

 

Hot Topics

Related Articles