உலகம்

இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிப்பு!

இலங்கையில் பால்மா,  கோதுமைமா எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியவசிய பொருக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை இன்று(11) முதல், புதிய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாவாகவும் 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை 480 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீமெந்து மற்றும் கோதுமைமா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன, இதன் படி, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘லிட்ரோ’ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை சந்தையில் 2,840 ரூபா ஆகும்.

அத்துடன் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 393 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலையை 1257 ரூபாவால் உயர்த்தியது.இதற்கமைய அதன் புதிய விலை 2,750 ரூபாவாகும்.

அத்தோடு, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதற்கு அமைய அதன் புதிய விலை 1,101 ரூபா ஆகும்.

2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய விலை 520 ரூபாவாக இருக்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles