உலகம்

எங்களுடன் கைகோர்த்து எல்லையற்ற வாய்ப்புக்களை அடையப்பெறுங்கள்

இலங்கையில் பொதி செய்வதற்கான அட்டைப் பெட்டிகளின் உற்பத்தியில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம் ஆரம்பித்துள்ள அதனது ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையானது 2021 ஒக்டோபர் 22 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் தொடர்பான தகவல் விளக்க பிரசுரம் கொழும்பு பங்குச் சந்தையின் இணையத்தளத்தில் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. Ex-Pack நிறுவனமானது முற்றுமுழுதாக Aberdeen Holdings நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழானது.

முன்னர் Expolanka Investments (Private) Limited என்ற பெயரில் அறியப்பட்ட Aberdeen Holdings நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள, பன்முகப்படுத்தப்பட்ட, குடும்ப கூட்டு வணிகங்களின் பெரு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.

Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம் பொதியிடல் தொழில் துறையில் இரு தசாப்த காலத்திற்கும் மேலாக புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை முன்னெடுத்து வந்துள்ளதுடன், 6 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்கள் அடங்கலாக விசாலமான வாடிக்கையாளர் தளத்தையும் கட்டியெழுப்பியுள்ளது. தொழிற்துறைகளுக்கு சேவைகளை வழங்கும் வணிகச் செயற்பாடுகளில் அசைக்கமுடியாத நன்மதிப்பினைக் கட்டியெழுப்பியுள்ள Ex-Pack நிறுவனம், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சந்தையில் நன்கு அறியப்படும் பெயராகவும், அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள ஒரு நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய இரண்டிலும் Ex-Pack முன்னிலை வகித்து வருவதுடன், அதன் வருமானத்தில் 52% பங்கானது அமெரிக்க டொலரில் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. வலுவான, பன்மைத்துவ தலைமைத்துவ அணியின் வழிகாட்டலுடனும், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி மீதாக அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற வகையில், முழுமையான சேவைகளையும் வழங்கும் பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளின் வழங்குனராக வளர்ச்சி மாற்றம் கண்டுள்ள இந்நிறுவனம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற அட்டைப் பெட்டிகளில் 5 க்கு 1 என்ற அடிப்படையில் தனது உற்பத்தி ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை தொடர்பில் Ex-Pack நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான சத்தார் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் மிகவும் விரும்பப்படுகின்ற அட்டைப் பெட்டிகள் வழங்குனராக மாறுகின்ற எமது பயணத்தில் எம்முடன் கைகோர்ப்பதற்கு எண்ணியுள்ள பொது மக்களை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். தற்போது 295 ஊழியர்களைக் கொண்ட எங்கள் வலுவான அணி, 203,000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட உற்பத்தி தொழிற்சாலையில் மாதந்தோறும் 2,650 மெட்ரிக் தொன் பொதி செய்யும் அட்டைப்பெட்டிகளை உற்பத்தி செய்து வருகிறது.  நாம் ஒரு விரிவான இடைக்காலம் முதல் நீண்ட காலம் வரையான வளர்ச்சி மூலோபாயத்தை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியுள்ளோம். 3 பில்லியன் ரூபா முதலீட்டுடன், புதிய, அதிநவீன உற்பத்தி ஆலையொன்றை நிர்மாணிப்பதும் இதில் அடங்கியுள்ளதுடன், இதற்குத் தேவையான நிதியில் பெரும் பங்கினை நாம் ஏற்கனவே நிறுவன மட்டத்திலும், கடன் வசதி மூலமாகவும் பெற்றுள்ளோம். இப்புதிய ஆலை மூலமாக 2025 ஆம் ஆண்டளவில் எமது உற்பத்தி ஆற்றல் கிட்டத்தட்ட இரு மடங்காக, அதாவது 4,000 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கும்.

எமது ஆரம்ப பங்கு பொது வழங்கல் நடவடிக்கை மூலமாக நாம் திரட்ட எண்ணியுள்ள சுமார் 700 மில்லியன் ரூபா தொகையானது மேற்குறிப்பிட்ட முயற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதுடன், இது எமக்கு வளர்ச்சிக்கான அதிகபட்ச வாய்ப்பிற்கும் வழகோலும். எம்மீது நம்பிக்கை மீது எமது பங்குகளை கொள்வனவு செய்துள்ள புதிய பங்குதாரர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் முற்கூட்டியே எமது நன்றிகளை தெரிவித்து, மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

கூட்டு முதலீட்டு வங்கிகளான Capital Alliance Limited மற்றும் Asia Securities Ltd ஆகியவற்றால் இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை நிர்வகிக்கப்படுவதுடன், Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம் இதன் மூலமாக நிறுவனத்தின் 83,333,333 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை பங்கொன்று ரூபா 8.40 என்ற விலையில் வழங்குகிறது.

இது ரூபா 2.8 பில்லியன் சந்தை மூலதன மதிப்பைப் கொண்டிருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது 2020 நிதியாண்டில் 7.7 மடங்கு விலை ஆதாய விகிதத்தைக் கொண்டிருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், 8.9 மடங்கு (2021 ஆகஸ்டில் உள்ளவாறு) பன்னிரண்டு மாதங்கள் பின்தங்கிய விலை ஆதாய விகிதமானது என உட்கிடையாக புலப்படுகின்றது.

Ex-Pack நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் வழக்கமான துளையிடப்பட்ட அட்டைப்பெட்டிகள் (Regular slotted cartons), டை-கட் அட்டைப்பெட்டிகள் (die-cut cartons), லெமினேட் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் (laminated cartons) மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விசேடமாக வடிவமைக்கப்பட்ட விசேட தயாரிப்புக்கள் அடங்கியுள்ளன. இந்த விசேட தயாரிப்புகளில் ஆடையணிகள் மற்றும் இலகுரக மீன் கொள்கலன்களின் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் அலுமாரி வடிவ அட்டைப்பெட்டிகள் (ஆடை தொங்கிகளுடன்) போன்ற தனித்துவமான மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அடங்கியுள்ளன.

2020 பொதுத் தேர்தலுக்காக இலங்கையின் தேர்தல் ஆணையத்திற்கு முதன்முறையாக மேம்பட்டு பாதுகாப்புடனான, இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய  தொழில்நுட்ப அம்சம் நிரம்பிய வாக்குப்பெட்டிகளை Ex-Pack பெருமையுடன் வடிவமைத்து, தயாரித்து வழங்கியிருந்தது. விரைவாக விற்றுத்தீரும் நுகர்வு உற்பத்திகள், நீடித்து உழைக்கும் நுகர்வு சாதனங்கள், ஆடையணி, தேயிலை மற்றும் மீன்பிடி அடங்கலாக பல்வேறுபட்ட தொழில் துறைகள் மத்தியில் உலகளாவில் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்களுக்கு இந்நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகின்றது.

 

Hot Topics

Related Articles