உலகம்

Ex-Pack நிறுவனம் முதலீட்டாளர் அமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது

Ex-Pack நிறுவனம் எதிர்வரும் ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கையையொட்டி 2021 ஒக்டோபர் 12 அன்று முதலீட்டாளர் அமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனத்தின் ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கைக்கு ஒரு சில வாரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், 2021 ஒக்டோபர் 12 ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான அமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Zoom தொழில்நுட்பம் மூலமாக நிகழ்நிலையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் எதிர்வரும் ஆரம்ப பொது பங்கு வழங்கல் தொடர்பான ஆழமான விளக்கம் மற்றும் வேறு எந்தவொரு சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பினை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர். பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளை உற்பத்தி செய்வதில் இலங்கையின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Ex-Pack ஆனது சர்வதேச அளவில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக பங்கொன்று ரூபா 8.40 விலையில் 83,333,333 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூபா 700 மில்லியன் தொகையை திரட்டுவதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளதுடன், இதன் சந்தை மூலதன மதிப்பு ரூபா 2.8 பில்லியனாக மாறும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இவ்வாறு திரட்டப்படவுள்ள நிதியில் ஒரு பகுதியானது ரூபா 3 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய உற்பத்தித் தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

Hot Topics

Related Articles