உலகம்

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அமானா வங்கி தொடர்ந்தும் வெகுமதிகளை வழங்குகின்றது

 

பெற்றோரின் வாழ்க்கையில் குழந்தைப் பிறப்பு என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அந்தத் தருணம் முதல், ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைக்கு சிறந்த அம்சங்களைப் பெற்றுக் கொடுப்பதைப் பற்றி சிந்திப்பார்கள். குறிப்பாக உறுதியான நிதி அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துவார்கள். பிள்ளைகளுக்கு தமது முழுத் திறனை எய்துவதற்கு உதவும் வகையில், பெற்றோரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ரூ. 1000 வைப்புடனான சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை வழங்கும் நடவடிக்கையை அமானா வங்கி ஆரம்பித்துள்ளது.

 

இந்த வெகுமதித் திட்டம் தொடர்பில் அமானா வங்கியின் வைப்புப் பிரிவின் தலைமை அதிகாரி அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “2018 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது முதல், பல பெற்றோர்களிடமிருந்து வங்கிக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்ததுடன், மிகவும் இளவயதிலிருந்து தமது பிள்ளைகளுக்காக சேமிக்க ஆரம்பித்திருந்தனர். புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக இந்தச் சலுகையை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், பெற்றோருக்கு, தமது பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவதற்காக உறுதியான நிதி அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், நாம் வழங்கும் ஆரம்ப வைப்புத் தொகையை ரூ. 1000 ஆக அதிகரித்துள்ளதுடன், பெற்றோருக்கு நிலையான கட்டளை ஒன்றை நிறுவிக் கொள்வதற்கான முறையையும் வழங்கியுள்ளோம்.” என்றார்.

 

இந்தத் திட்டத்தினூடாக 2 வருடங்களுக்கு குறைந்த வயதுடைய பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் எந்தவொரு அமானா வங்கிக் கிளைக்கும் பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிச் சான்றுடன் விஜயம் செய்து, புதிய சிறுவர் சேமிப்புக் கணக்கை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ள முடியும். தமது பிள்ளைகளின் கணக்குக்கு மாதாந்த நிலையான கட்டளையை நிறுவும் பெற்றோருக்கு, வருடத்தின் நிறைவில் நிலையான கட்டளைத் தொகைக்கு நிகரான தொகை, போனஸ் கொடுப்பனவாக வங்கியிடமிருந்து அன்பளிப்புச் செய்யப்படும்.

 

உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்களுக்கு நட்பான வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சி மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்தின் பிரகாரம், வாடிக்கையாளர்களை வங்கி சென்றடைவதுடன், அதற்காக தனது வளர்ந்து வரும் கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை அலகுகளை பயன்படுத்துகின்றது. மேலும் வங்கியினால் நாடு முழுவதையும் சேர்ந்த 4500 க்கு அதிகமான ATMகளை அணுகக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 850 க்கு அதிகமான Pay&Go Kioskகளை பயன்படுத்தி பண வைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள், 24×7மணி நேர பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தொழிற்பாடுகளுக்கான  சௌகரியத்தை அனுபவிக்க முடியும்.

 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Hot Topics

Related Articles