உலகம்

அசாம் சிறைகளில் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி!

இந்தியா, அசாம் மாநிலம் நாகோன் நகரில் உள்ள மத்திய சிறையில் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிறப்பு சிறையில் உள்ள 45 கைதிகள் , பெண் கைதிகள் உட்பட மொத்தம் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

போதைப் பழக்கம் காரணமாக அந்தக் கைதிகளுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அரச வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.

போதைப் பழக்கம் உள்ள கைதிகள் பலர், போதை மருந்தை செலுத்திக்கொள்ள ஒரே ஊசியை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Hot Topics

Related Articles