உலகம்

‘நடந்தால் இரண்டடி’ பாடல் புகழ் பிறைசூடன் காலமானார்!

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் தமது 65 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் பிறைசூடன். அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர் எழுதியுள்ளார்.

ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா.. மீனம்மா, மாப்பிள்ளை படத்தில் வேறு வேளை உனக்கு இல்லையே, பண்ணக்காரன் படத்தில் சைலன்ஸ் இது காதல் செய்யும் நேரம் இது, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் யாரடி, இதயமே படத்தில் இதயமே.. இதயமே உள்ளிட்ட முக்கியமான பாடங்களை எழுதியுள்ளார்.

இதுவரை 400 க்கும் மேற்பட்டப் படங்களில் 1400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

Hot Topics

Related Articles