உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இரு பத்திரிகையாளர்னளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களான  மரியா ரெசா (பிலிப்பைன்ஸ்), டிமிட்ரி முராட்டா (ரஷ்யா) ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக  குறித்த இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவம், இயற்பியல் வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Hot Topics

Related Articles