உலகம்

2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்கு இன்று (06) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலில் உலோகங்கள், நொதிகள் ஆகிய இருவிதமான வினையூக்கிகளே  உள்ளதாக நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்த சூழலில், இவர்கள் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

 

Hot Topics

Related Articles