உலகம்

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நங்கூரம்!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்” கப்பல் நேற்றிரவு இலங்கை துறைமுக அதிகாரசபை வரவேற்புடன் கொழும்பு  துறைமுகத்தில் நங்கூரம் இட்டுள்ளது.

கப்பலின் வருகையை முன்னிட்டு துறைமுக அதிகாரசபையை சீன தூதரகமும் பாராட்டுகளை தெரிவித்துள்ளன.

எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன தூதரகமும் விடுத்துள்ள டுவிட்டர் பதிவு,

கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களில் மாத்திரமே இந்த கப்பல் பயணிக்க கூடிய வசதிகள் காணப்படுகின்றன.

இலங்கையின் கடல்சார் வணிக வரலாற்றில் இந்தக் கப்பலின் வருகை மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று துறைமுக அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

400 மீட்டர் நீளத்தை உடைய இந்தக் கப்பல் 23,992 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.

இந்த கப்பல் “சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்” என்ற கொரிய கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டது.

 

Hot Topics

Related Articles