உலகம்

இலங்கையில் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில்  ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகாரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பங்களின் ஊடான ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Hot Topics

Related Articles