உலகம்

ரஷ்ய திரைப்படக்குழு படப்பிடிப்பை நடத்த விண்வெளிக்கு பறந்தது!

ரஷ்ய திரைப்படக்குழு விண்வெளியில் 12 நாட்கள் படப்பிடிப்புக்களை நடத்துவதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளது.

‘The Challenge’ எனப்படும் திரைப்படத்தின் காட்சிகளை படப்பிடிப்பதற்காக இவ்வாறு விண்வெளிக்கு இன்று குறித்த குழு பயணித்துள்ளது.

இந்த பயணத்தை நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild), தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko) மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Roscosmos ) ‘சோயுஸ் எம்எஸ் -19′ (Soyuz MS-19) விண்கலம் செவ்வாய்க்கிழமை கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து பயணித்தது அடுத்த மூன்று மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ‘மிஷன் இம்பாசிபிள்’ என்ற திரைப்படக் காட்சியை விண்வெளியில் படமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் ரஷ்யா அதனை செயற்படுத்தியுள்ளது. இதையடுத்து விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தும் உலகின் முதலாவது நாடாக ரஷ்யா வரலாறில் இடம்பிடித்துள்ளது.

Hot Topics

Related Articles