உலகம்

அமானா வங்கியின் ISO/IEC 27001:2013 IT பாதுகாப்பு கட்டமைப்பு சான்றளிப்பை Bureau Veritas உறுதி செய்துள்ளது

அமானா வங்கியின் தகவல் பாதுகாப்பு கட்டமைப்பின் உறுதித் தன்மைக்காக வழங்கப்பட்டிருந்த ISO/IEC 27001:2013 சான்றிதழை Bureau Veritas ஸ்ரீ லங்கா உறுதி செய்துள்ளது. உலகின் சான்றளிப்புத் துறையின் முன்னோடியாகத் திகழும் Bureau Veritas SA France இன் அங்கத்துவ அமைப்பாகத் திகழும் Bureau Veritas ஸ்ரீ லங்கா, அமானா வங்கியினால் பின்பற்றப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் வழங்கப்படும் சிறந்த தகவல் பாதுகாப்பு மற்றும் இடர் மீட்பு பகுதியின் செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் சுயாதீனமான ஆழமான கட்டமைப்பு மீளாய்வு மற்றும் கணக்காய்வு பணிகளை மேற்கொண்டு, இந்த உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது.

 

இந்த ISO/IEC 2700:2013 சான்று உறுதிப்படுத்தப்பட்டமை தொடர்பில் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி ரஜித திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியைப் பொறுத்தமட்டில் உரிய காலத்தில் கிடைத்துள்ள தர உறுதிப்படுத்தலாக அமைந்துள்ளது. ISO/IEC 2700:2013 சான்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதனூடாக, எமது தகவல் பாதுகாப்பு கட்டமைப்புகளின் உறுதித் தன்மை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் சிறந்த நிலையில் அமைந்திருக்கின்றமை புலப்படுகின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மற்றும் தகவல் கட்டமைப்புகளில் அதிகளவு தங்கியிருக்கும் காலகட்டத்தில், தகவல் பாதுகாப்பு இடர்களுக்கு நிறுவனங்கள் தம்மை சிறந்த முறையில் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் உச்ச பிரத்தியேகத் தன்மை மற்றும் தகவல் பாதுகாப்பு மற்றும் இன்றைய தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள சூழலில் அவர்களின் தகவல்களை பாதுகாக்கும் சூழலில், எமது தகவல் கட்டமைப்புகள் உயர் தகவல் பாதுகாப்புக்கான சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளில் சான்றளிப்பை உறுதி செய்யும் முறைமையாக ISO/IEC 27001:2013 அமைந்துள்ளது. நிறுவனங்களுக்கு தமது பாதிப்புறும் தன்மையை புரிந்து கொள்வதற்கு அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவை வழங்கும் தரங்களை இணைத்த கட்டமைப்பு உறுதி செய்யும் முறைமையாகவும் உள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் இதர பங்காளர்களின் தகவல்கள் கிடைப்பனவு, சீர்மை மற்றும் இரகசியத்தன்மை போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்காக காணப்படும் இடர்களை இனங்காண்பதில் உதவுவதில் இந்த சான்று பங்களிப்பு வழங்குவதுடன், இடர் முகாமைத்துவ செயன்முறைகளை பிரயோகித்து, ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் கொண்டுள்ள தரப்பினருக்கு குறித்த இடர்கள் முறையாக நிர்வகிக்கப்படுகின்றமை தொடர்பான நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருக்கும்.

உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்களுக்கு நட்பான வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சி மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்தின் பிரகாரம், வாடிக்கையாளர்களை வங்கி சென்றடைவதுடன், அதற்காக தனது வளர்ந்து வரும் கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை அலகுகளை பயன்படுத்துகின்றது. மேலும் வங்கியினால் நாடு முழுவதையும் சேர்ந்த 4500 க்கு அதிகமான ATMகளை அணுகக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 850 க்கு அதிகமான Pay&Go Kioskகளை பயன்படுத்தி பண வைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள், 24×7பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை அனுபவிக்க முடியும்.

 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரஜித திசாநாயக்க

பிரதம தகவல் அதிகாரி – அமானா வங்கி

Hot Topics

Related Articles