உலகம்

எப்போதும் சிறந்ததை சிறுவர்களுக்கு பரிசாக வழங்கும் HNB இம்முறை உலக சிறுவர் தினத்தை பெருமையுடன் அனுஷ்டிக்கிறது

 

குழந்தை பருவத்திலிருந்து ஒரு பிள்ளை தனது வாழ்க்கையில் வெற்றிகரமாக பெரிய ஆளாவது சமுதாயத்தின் மிக முக்கியமான கட்டமாக விவரிக்க முடியும் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பாகும். குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வங்கி சேவைகளுடன் குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கத்துடன் மீண்டும் உலக சிறுவர் தினத்தை அனுஷ்டிக்கிறது.

பல ஆண்டுகளாக, வங்கி ஏற்கனவே இலங்கையின் மிகவும் பிரபலமான சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் வகையில், சிங்கிதி கிரிகெட்டியோ, சிங்கிதி லமா மற்றும் HNB Teen ஆகிய கணக்குகள் குழந்தைகள் பிறப்பு முதல் 12 வயது வரையிலும், இளமைப் பருவம் முதல் பெரியவர்களாகும் பருவம் வரையிலும் அவர்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். HNB சிங்கிதி மற்றும் HNB Teen கணக்குகள் இளம் இலங்கையர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் சாதனைகளை நிலையான மற்றும் உறுதியான வெகுமதிகளுடன் இணைப்பதன் மூலம் தவறாமல் அவர்களது சேமிக்க பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.

“கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் ஸ்தீரமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்டு, நமது வருங்கால சந்ததியினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 1991ஆம் ஆண்டில் முதல் தடவையாக சிறுவர் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிய இலங்கையின் முதல் வங்கியாக HNB உள்ளது. எமது சிறுவர் வாடிக்கையாளர்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு நாங்கள் எங்கள் இளைய வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், பெற்றோர்களுக்கு இந்த நிச்சயமற்ற காலப்பகுதியில் ஆறுதல் அளிக்கும் வகையில் வங்கி சிறுவர் சேமிப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்த முடிவு செய்தோம்.” என HNB இன் வாடிக்கையாளர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகளின் பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.

“கடந்த சில ஆண்டுகளில், வங்கி சேமிப்பு பழக்கத்தை வளர்க்கவும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விசேட கல்வி குறிக்கோள்களை அடைவதற்கு ஊக்குவிக்க பரிசில்களை வழங்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் ஒரு திறமையான தலைமுறையை உடைய சிறுவர்களை உருவாக்கும் குடிமக்களாக ஒரு நிலையான நிதி அடிப்படையை உருவாக்குவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நாங்கள் எங்கள் திட்டங்களை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

எப்பொழுதும் தமது வாடிக்கையாளர்களுக்கு உச்ச அளவு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் HNBஇன் சிந்தனைக்கு அமைய இந்த ஆண்டு சிங்கிதி Giftober மேம்பாட்டு திட்டத்திற்காக ஜம்போ Pen Holderகள், பாடசாலை உபகரணங்கள் (Stationary), Travelling Bags மற்றும் HNB இலச்சினை அடங்கிய Tea Sets உள்ளிட்ட 100,000 ரூபா வரையான பரிசு வவுச்சர்கள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளுடன் ர்Nடீ வருடாந்த சிங்கிதி புகைவழடிநச சேமிப்பு ஊக்குவிப்பு மாதத்தை தொடங்க தயாராகி வருகிறது. இந்த Giftober 2021 ஒக்டோபர் 05ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மேலும், இதற்கு சமாந்திரமாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு உகந்த தேவைக்கும் மற்றும் வசதிக்கும் ஏற்ற முதலீட்டு திட்;டங்கள் மூலம் அவர்கள் விரும்பும் வகையில் நிதி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக HNB Minor Investments Plan கணக்கு ஒக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கையிலுள்ள முன்னணி வங்கியொன்றினால் வழங்கப்படும் பாரிய புலமைப்பரிசில் நிதியம் போன்றே சிறுவர்களுக்காக பெறுமதியான பணப்பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் வங்கிகளுக்குள் மிகவும் பிரபல்யமான திட்டமான HNB Diri Daru 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் லண்டன் O/L மற்றும் A/L பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் HNB TEEN கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மதிப்புமிக்க ரொக்கப் பரிசுகளை வழங்குகிறது. இதற்கு தகுதி பெற அவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையொன்றை வைத்திருக்க வேண்டும். 2020இல் நடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 2,500க்கும் மேற்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு HNB 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பரிசுகளை வழங்கியது.

HNBயின் இந்த பிரதான தேசிய அளவிலான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகளுக்கு தகுதி பெறுவதற்கு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் சிங்கித்தி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாவை கணக்கு இருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் கட்-அவுட் மதிப்பெண்களைப் பெறும் எந்த மாணவருக்கும் 5,000 ரூபா ரொக்கப் பரிசு கிடைப்பதுடன் மற்றும் அந்தக் கணக்கிற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 500 ரூபா நிலையியற் கட்டளை இருந்தால், தொடர்புடைய ரொக்கப் பரிசு 10,000 ரூபாவாக இரட்டிப்பாகும்.

மேலும், HNB பெற்றோரிடமிருந்து HNB சிங்கித்தி மற்றும் Teen சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட நிலையான கட்டளையின் ஊடாக ஒரு தனித்துவமான காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக HNB Assurance உடன் இணைந்து பணியாற்றும் வங்கி, பெற்றோரின் திடீர் மரணம் போன்ற துரதிஷ்டவமான நிகழ்வுகள், இயற்கை அல்லது தற்செயலான மரணங்கள் ஏற்பட்டால் நிலையான கட்டளையின் மூலம் அவரது குழந்தையின் கணக்கிற்காக செலுத்தும் 1,000 – 25,000 ரூபா வரையிலான தொகையை, குழந்தை 18 வயதை அடையும் வரை அந்த தொகையை அவர்களது கணக்கில் வைப்புச் செய்ய HNB உத்தரவாதமளிக்கின்றது.

மேலும், பாடசாலை மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நோக்கில், HNB மாணவர் சேமிப்பு பிரிவை (Student Saving Units – SSU) இலங்கையில் முதன் முதலில் வங்கி அறிமுகப்படுத்தியது. அன்று முதல், வங்கி அதன் சேவைகளை இலங்கை முழுவதும் 160க்கும் மேற்பட்ட சிறுவர் சேமிப்பு பிரிவுகளுக்கு (SSU) விரிவுபடுத்தியுள்ளது. பாடசாலைகளுக்குள் நடத்தப்படும் சிறிய வங்கிகளை நிர்வகிக்கும் முதல் அனுபவம் கொண்ட 1000 மாணவ நிர்வகிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு வங்கிக்கு உள்ளது.

இந்த வகையில், இலங்கையின் இளைஞர்களிடையே வங்கி நிதி அறிவை மேம்படுத்தியுள்ளது, இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு அவர்கள் பெறக்கூடிய மிக மதிப்புமிக்க மற்றும் முக்கியமான பரிசுகளில் ஒன்று, அவர்களின் சேமிப்பு மீதான பொறுப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது, இது வலுவான மற்றும் நிலையான உத்தரவாதத்தை அளிக்கும் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும்.

“தற்போதைய தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் சிறுவர் சேமிப்பின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த சில மாதங்களாக, கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பை அதிகப்படுத்தவும், குறிப்பாக அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தங்கள் சேமிப்புகளை அதிகரிக்க எப்படி முயற்சித்துள்ளார்கள் என்பதை நாங்கள் அவதானித்தோம். அதுபோல, எமது சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் நிதிப் பாதுகாப்போடு வளர்ந்து ஆளான பின்னர் அவர்களின் கனவை நனவாக்கிக் கொள்ள முடியுமென உறுதியளிக்க விரும்புகிறேன்.” என HNB இன் சிரேஷ்ட முகாமையாளர் – வைப்புகள், விரங்க கமகே தெரிவித்தார்.

சிங்கிதி கிரிகெட்டியோ கணக்கு புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் குழந்தையின் பிறந்த திததியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பெற்றோர்களால் கணக்கை ஆரம்பிக்க முடியும். இந்த கணக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குவதுடன் இலவச வைப்புத்தொகையாக 1,000 ரூபாவைக் கொண்டு HNB இலிருந்து கணக்கை ஆரம்பிக்கும் போது கணக்கு வைத்திருக்கும் சிறார்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். குழந்தை ஐந்து வயதை எட்டும்போது, அந்த கணக்கும் தானாகவே HNB சிங்கிதி கணக்காகவும், 13 வயதை அடையும் போது HNB Teen கணக்காகவும் மாற்றமடையும்.

Hot Topics

Related Articles