உலகம்

புதிதாக வங்கி கணக்கு தொடங்க சென்ற கூலி தொழிலாளியின் பெயரில் 9 கோடி ரூபாய்!

இந்தியா பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ஒருவர் தனது பெயரில் வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, ஏற்கனவே அவர் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க முயன்றுள்ளார்.

அவரின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பதாக வங்கியின் சேவை மைய அலுவலர், தெரிவித்துள்ளார்.

மேலும் கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் வைப்பிலிடபட்டிருப்பதை கண்டு திகைப்படைந்துள்ளார்.

குறித்த கூலித்த தொழிலாளியின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க பட்டுள்ளது. ஆனால், குறித்த வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை.

கூலித்த தொழிலாளியின் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பெப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

கூலித்த தொழிலாளி வங்கிளில் முறைப்பாடு செய்ததையடுத்து வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கள் தொடங்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles