உலகம்

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் : இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி முன்னிலையில்!

ஜெர்மனி பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.  இந்த தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளரான ஆர்மீன் லேஷெட்டுக்கு தமது ஆதரவை தெரிவித்தார் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கல்.

ஆர்மீன் லேஷெட் தவிர கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளரான அனலேனா பேர்பாக், ஜெர்மனியின் தற்போதைய நிதி மந்திரியான ஓலாப் ஷோட்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுகின்றது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் (SPD) தேர்தல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். ஆனால் முடிவுகள் இன்னும் இறுதி இல்லை.

கட்சியின் தலைவர் “ஓலாஃப் ஸ்கோல்ஸ்” தனது கட்சி ஆட்சி செய்ய தெளிவான ஆணையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(google data)

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக கடந்த 2005-ம் ஆண்டு ஏஞ்சலா மெர்கல் பொறுப்பேற்றார். தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்த அவர், உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

இதற்கிடையே, ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் செப்டம்பர் 26-ம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்த ஏஞ்சலா மெர்கல் இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். மேலும், அரசியல் வாழ்வில் இருந்தும் முழுமையாக விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

Hot Topics

Related Articles