உலகம்

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

இன்று முதல் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த தடை இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடா போக்குவரத்து துறை, பயணிகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பயணிகள் புறப்பட திட்டமிட்ட 18 மணி நேரத்திற்குள், டெல்லி விமான நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கனடா போக்குவரத்து துறை கூறி உள்ளது.

கொரோ தீவிரம் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கனடா அரசு இடை நிறுத்தியிருந்தது.

நேரடி விமான தடை காரணமாக, கனடாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் இணைப்பு விமானங்களில் டுபாய், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய 3 நாடுகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

அத்துடன், 3வது நாட்டில் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். இதன் காரணமாக ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமானது.

Hot Topics

Related Articles