உலகம்

ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் தாடி வெட்ட தலிபான்கள் தடை!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சிகையலங்கார நிபுணர்கள் தாடியை முழுமையாக நீக்கவோ அல்லது வெட்டவோ கூடாது என்று தலிபான் தடை விதித்துள்ளது.

விதிமுறையை மீறும் எவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் மத காவல்துறை கூறுகிறது.

தலைநகர் காபூலில் சிகையலங்கார நிலையங்களுக்கும் இவ்வாறு உத்தரவுகளை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தலிபான்கள் தாம் எதிரியாக பார்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

சனிக்கிழமை, தலிபான்கள் நான்கு கடத்தல்காரர்களை சுட்டுக் கொன்றதோடு அவர்களின் உடல்கள் ஹெராட் மாகாணத்தின் தெருக்களில் தொங்கவிட்டுள்ளனர்.

மிதமான அரசாங்கத்தை அமைப்பதாக தலிபான்கள் வாக்குறுதி அளித்திருந்த போதும் கடந்த கால ஆட்சியின் கடுமையான விதிகளை திரும்பவும் அமுல்படுத்த தலிபான்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நன்றி பிபிசி

Hot Topics

Related Articles