உலகம்

IASL நடத்திய 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வேச்சுவல் ஆயுள் காப்புறுதித்துறை விற்பனை விருதுகள் விழா

இலங்கை காப்புறுதிச் சங்கம் (IASL), 2019 மற்றும் 2020 ஆம்; ஆண்டுகளுக்கான வருடாந்த ஆயுள் காப்புறுதி விற்பனை விருதுகள் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. வேச்சுவல் (மெய்நிகர்) நிகழ்வாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் வைபவம், தேசிய காப்புறுதி தினத்துடன் இணைந்ததாக, 2021 செப்டம்பர் 01 ஆம் திகதி நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இந்த ஒன்லைன் (வழிவரு) நிகழ்வில், இலங்கை காப்புறுதி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் திரு. ராஸிக் சரூக் பிரதம அதிதியாகவும், பணிப்பாளர் நாயகம் திருமதி தமயந்தி பெர்னாண்டோ கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் கருத்து வெளியிட்ட IASL நிறுவனத்தின் தலைவர் திரு. இப்திகார் அஹமட், ‘இங்கு தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார். நாடு தழுவிய ரீதியில் காப்புறுதி விற்பனை தொழில் வல்லுநர்களிடையே மிகச் சிறந்தவர்களைத் தெரிவு செய்யும் ஒரு தளமாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒரு விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என்பதை நான் இங்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தற்போது நிலவி வரும் தொற்று நோய் காலப்பகுதி, இதற்கு முன்னர் இருந்த அனைத்துக் காலங்களை விடவும், காப்புறுதியின் தேவையை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அந்த வகையில் காப்புறுதித் துறை என்ற ரீதியில் நாம் மக்களின் இடர்களைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு முடிந்தளவு உதவி புரிய வேண்டியது எமது பொறுப்பாகும். இதன் மூலமே காப்புறுதி ஆலோசகர்கள் தங்களது திறமைகளைக் கொண்டே உள்ளடக்கப்பட வேண்டிய காப்புறுதிகள் பற்றிய விபரங்களையும், விளக்கங்களையும் பெற்றுக்கொடுக்கும் தேவை காணப்படுகிறது.

இவ்வாறான திறமைகள் கொண்ட காப்புறுதி விற்பனை அதிகாரிகளுக்கு, கௌரவத்தைப் பெற்றுக் கொடுப்பதும், அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிப்பதும், அவர்களின் முயற்சிக்குப் பெறுமதியைப் பெற்றுக் கொடுப்பதும், அதன் மூலம் அவர்களுக்கான வரவேற்பை அதிகரிப்பதன் மூலமும் காப்புறுதித் துறையின் வளர்ச்சியை நாம் எதிர்பார்க்க முடியும்’ என்று கூறினார்.

இந்தப் போட்டி, முதல் முறையாக 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அது, தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் ஒன்றுகூடலின் ஒரு பகுதியாக (NAFLIA) 2019 செப்டம்பர் மாதம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், தொற்று நோய் காரணமாக, பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்பட்டுள்ளதனால், IASL இந்த நிகழ்வின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான வெற்றியாளர் கௌரவிப்பை ஒன்லைன் மூலம் நடத்த தீர்மானித்தது.

இந்த வைபவத்தில் IASL நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை ஒன்று கூடல் (ஆளுகு) தலைவர் திரு.தினேஷ் யோகரத்தினம் கருத்துத் தெரிவிக்கையில், ‘ஆயுள் காப்புறுதித் துறையில் மிகச் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் தேசிய தளமாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, இத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தனிப்பட்ட பெறுபேறுகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்ளவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் பெரும் துணையாக அமைகிறது. இதில் தெரிவாக, தொடர்ச்சியான கடின உழைப்புடன், ஏனைய தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதன் மூலமே தொழிற்துறையின் வளர்ச்சியை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 2019 ஆம் ஆண்டுக்கென 34 விருதுகளும், 2020 ஆம் ஆண்டுக்கென 31 விருதுகளும் என்ற வகையில் மொத்தம் 65 விற்பனை அதிகாரிகள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்வுகளை நேரடியாக நடத்த முடியாத காரணத்தினால், இதனை ஒன்லைன் மூலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த ஒன்லைன் நிகழ்வுக்குக் கிடைத்த வரவேற்பும், ஆதரவும் எதிர்பாராத வகையில் சிறந்த முறையில் அமைந்திருந்தது. இதில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறினார்.

விருது வழங்கும் வைபவத்தில், பிரதான பிரிவுகளாக மிகச் சிறந்த காப்புறுதி முகவர், மிகச் சிறந்த குழு ஃ குழுவின் தலைவர் மற்றும் மிகச் சிறந்த கிளை முகாமையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இதன் போது உரிய அதிகாரிகள், பணியாற்றும் நிறுவனத்தின் அளவு மற்றும் நிறுவனத்தின் மொத்த காப்புறுதிக் கட்டுப்பண வருமானம் என்பனவற்றை வைத்து நிறுவனங்கள் பிரிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய அதிகூடிய கொடுப்பனவு வருமானம் பெறும் ஐந்து நிறுவனங்கள் பாரிய நிறுவனங்கள் என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டன. அடுத்த ஐந்து நிறுவனங்கள் நடுத்தர என்ற வகையிலும், ஏனையவை சிறிய நிறுவனங்கள் என்ற வகையிலும் வகைப்படுத்தப்பட்டன. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தத் தெரிவுகளின் போது, வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Hot Topics

Related Articles