உலகம்

3 அமைச்சுகளின் பரிந்துரைகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கிக்கொள்ள இலங்கை முடிவு!

இலங்கை ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

கொவிட் பணிக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்ப3 அமைச்சுகளின் பரிந்துரைகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கிக்கொள்ள இலங்கை முடிவு!சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார நிபுணர் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு திறக்கப்பட உள்ளது.ட்டுள்ளது.
நாட்டில் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், இறப்புகளைக் குறைக்கவும் ஒகஸ்ட் 21 முதல் அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை விதித்தது.

தற்போது இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ள நிலையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் படி 3 அமைச்சுகளினால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களுக்கு அமைய சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார நிபுணர் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு திறக்கப்பட உள்ளது.

அரச சேவைகள் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பொது நிர்வாக அமைச்சும் பொது போக்குவரத்து குறித்து போக்குவரத்து அமைச்சும் தனியார் துறையில் சேவைகளை பராமரிப்பது குறித்து தொழிலாளர் அமைச்சும் பரிந்துரைகளை வழங்கும் என குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles