உலகம்

“பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பிக்க போவதில்லை” – இலங்கை ஆசிரியர்கள் விடாபிடி!

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும்,  தங்கள் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் வரை கற்பித்தலில் ஈடுபட போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பாடசாலைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக அல்லது பரிட்சைகளை நடத்துவதற்கு முன்பு தங்கள் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்.

“எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார். யார் இந்த நகைச்சுவைகளை ஏற்றுக்கொள்வது?” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்று பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்தோடு பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் 2 மாதங்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதையடுத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  நாட்டை ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இத்தோடு பாடசாலைகளை அடுத்த இருவாரங்களில் 4 கட்டங்களாக திறப்பதற்கான முன்னாயத்தங்களில் கல்வி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.

Hot Topics

Related Articles