உலகம்

remium International நிறுவனம் கொவிட்-19 இற்கு எதிராகப் போராடும் தேசிய முயற்சியை வலுப்படுத்தியுள்ளது !

Premium International நிறுவனம் ஆசியாவில் முதன்முதலாக முழுமையான உபகரண வசதிகளைக் கொண்ட நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவை நன்கொடையளித்து கொவிட்-19 இற்கு எதிராகப் போராடும் தேசிய முயற்சியை வலுப்படுத்தியுள்ளது  

 

மிகவும் விரிவான சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்பத் தீர்வுகளில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Premium International, உலகளாவில் பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தேசிய சுகாதாரப் பராமரிப்பு முயற்சிக்கு உதவும் முகமாக, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 3 படுக்கை வசதிகளைக் கொண்ட, முழுமையான உபகரண வசதிகளுடனான, அதிநவீன நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவை நன்கொடையளித்துள்ளது. இந்த புத்தாக்கமான தீர்வானது செப்டெம்பர் 14 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமையன்று பேராதனை போதனா வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டதுடன், கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக உடனடியாகவே வைத்தியசாலையால் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரான கௌரவ கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் இச்சிகிச்சைப் பிரிவின் நாடாவை சம்பிரதாயபூர்வமாக வெட்டி அதனைத் திறந்து வைத்துள்ளார்.

தீவிர சிகிச்சையில் தாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தின் துணையுடன், Premium அணி நாடெங்கிலும் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படுகின்ற தீவிர சிகிச்சைப் பிரிவு திறனை சமாளிப்பதற்கு முழுமையான தீர்வொன்றை வெளிக்கொண்டு வரும் முயற்சியை ஆரம்பித்துள்ளதுடன், மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளர்களின் உயிர்களைக் காப்பதில் முக்கியமான அதிநவீன, உயர் தொழில்நுட்ப உபகரண வசதியை கூடுதலான அளவில் பெற்றுக்கொள்ளும் வசதியையும் உறுதி செய்கின்றது. எந்த இடத்திலும் இயல்பாகவே தொழிற்படும் வசதியைக் கொண்ட இந்த தீவிர சிகிச்சைப் பிரிவானது மிகவும் சுலபமாகப் பொருத்தி, உடனடியாகவே பயன்படுத்துவதற்கு இடமளிப்பதுடன், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் மீது காணப்படும் சுமையைக் கணிசமான அளவில் குறைக்கின்றது. அத்துடன் தீவிர சிகிச்சை ஆற்றலை மகத்தான அளவில் உறுதிசெய்து, சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டிய நேரத்தையும் குறைக்கின்றது.

இந்த நன்கொடை குறித்து, Premium International நிறுவனத்தின் செயற்திட்டப் பணிப்பாளரான திரு சுஜீவ சுமனசேன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நமது அதிநவீன நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு மூலம் கொவிட்-19 நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் தேசிய முயற்சியை வலுப்படுத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆசிய பிராந்தியத்தில் இந்த வகையில் பயன்படுத்தப்படுகின்ற முதன்முதல் தீவிர சிகிச்சைப் பிரிவு இதுவாக அமைந்துள்ளதுடன், தற்போதைய சுகாதார நெருக்கடியை தணிவிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த, பேராதனை போதனா வைத்தியசாலையின் உபயோகத்திற்கு முதலாவது தீவிர சிகிச்சைப் பிரிவை நாங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கியுள்ளோம். விரைவாக ஏற்பாட்டை அமைத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சாதனத்தின் உயர் தொழில்நுட்பத் தன்மை காரணமாக சிகிச்சையில் நேர்மறையான தாக்கத்தை உள்ளடக்கிய இத்தகைய நடமாடும் சிகிச்சைப் பிரிவைப் பயன்படுத்துவதன் குறிப்பிடத்தக்க நன்மைகள் எளிதில் புலப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இதையொட்டி, தீவிர சிகிச்சைப் பராமரிப்பு நோயாளிகளுக்கான வசதிகளில் கடுமையான பற்றாக்குறையை அனுபவிக்கும் உலகளவில் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக்குவதற்கு இந்த சிகிச்சைப் பிரிவு கொண்டுள்ள குறிப்பிடத்தக்க ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வை இது ஏற்படுத்தும். முழுமையான உபகரண வசதிகளைக் கொண்ட இந்த நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்நாட்டில் திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் காணப்படும் உயர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனுக்கு சான்றாகும். இலங்கையில் இத்தகைய அளவில் திறன்மிக்க ஒரு தீர்வைத் தோற்றுவிப்பதை அதுவே சாத்தியமாக்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

(நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு)

 

Premium International நிறுவனம் ஆனது ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனராகத் திகழ்ந்து வருவதுடன், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான தொழில்துறை பொறியியல் தேவைகளில் முக்கியமான தேவைகளை வழங்கி, பாரம்பரிய தயாரிப்பு-சந்தை கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று தொழில்துறையின் பரந்த தேவைகளுக்கு சேவை செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டது. நாடு எதிர்கொள்ளும் பலவிதமான சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க பல உள்ளூர் மற்றும் உலகளாவிய புத்தாக்கமான வணிக கூட்டாளர்களுடன் Premium இணைந்து செயற்பட்டு வருகின்றது. இத்தடவை கொள்கலனின் வடிவமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு Pership நிறுவனத்துடன் ஒன்றுபட்டு செயற்பட்டுள்ளது. Premium International தனது வரலாறு முழுவதும் சுகாதார பராமரிப்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதிலும், மேம்படுத்துவதிலும் முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு செயற்கை சுவாசத் தொகுதிகளில் 70% க்கும் அதிகமானவை இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் எழும் முக்கியமான தேவைகளை தீர்க்கும் அதிநவீன புத்தாக்கமான தீர்வுகளை உருவாக்குவதன் மூலம், அனைத்து குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பேணிப்பாதுகாப்பதில் தொடர்ந்து பணியாற்றுவதே Premium நிறுவனத்தின் நோக்கமாகும்.

 

புகைப்படம் 1 – சம்பிரதாயபூர்வமாக நாடாவினை வெட்டித் திறந்து வைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சரான கௌரவ கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் காட்சி.

 

Hot Topics

Related Articles