உலகம்

போட்ஸ்வானாவின் இளம் அழகியாக இலங்கைப் பெண் மகுடம்!

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவின் இளம் அழகியாக இலங்கைப் பெண் மகுடம் சூடியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கிம்ஹானி பெரேரா என்ற 17 வயது பெண் ணே, 42 போட்டியாளர்களிடையே ‘Miss Teen International Botswana 2021’ என்ற பட்டத்தை வென்றுள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘Miss Teen International Botswana 2021’ இளம் அழகிப் போட்டியில் போட்ஸ்வானாவின் ‘பிலிக்வே’ மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிம்ஹானி பெரேரா பங்குபற்றியிருந்தார்.

இதன்படி போட்ஸ்வான இளம் அழகியாக மகுடம் சூடிய கிம்ஹானி, இந்தியாவில் நடைபெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டார்.
கிம்ஹானி பெரேராவின் தந்தை இந்திக பெரேரா, 1990 முதல் போட்ஸ்வானாவில் ஒரு வியாபாரியாக தொழில் புரிந்து வருகின்றார்.

Hot Topics

Related Articles