உலகம்

John Deere டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்காக கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க Singer உடன் கைகோர்க்கும் HNB

 

இலங்கையின் தனியார் துறை வங்கியான HNB மற்றும் இலங்கையில் முன்னணி நுகர்வுப் பொருட்கள் விற்பனையாளர்களும் மற்றும் John Deere டிராக்டர்களுக்காக இலங்கையின் ஒரேயொரு முகவரான சிங்கர் நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு வசதியான லீசிங் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது.

HNB தனிப்பட்ட நிதி சேவைகளின் பிரதானி காஞ்சன கருணாகம மற்றும் சிங்கரின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் சிங்கர் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த கூட்டான்மை குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த விளம்பரத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் சிங்கரிடமிருந்து இலவச உத்தரவாதத்தையும் காப்பீட்டையும் பெறுவார்கள் மேலும் இந்த கூட்டாண்மை காலத்திற்கு JD உதிரிப் பாகங்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளையும் பெறுவார்கள். மேலும், சிங்கர் 24/7 மணிநேர சேவைகள், வாகனப் பதிவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வீட்டுக்கு கொண்டுவந்து கொடுத்தல் (Free Home Delivery Service) உள்ளிட்ட பல்வேறு வகையான பிரத்யேக சேவைகளை வழங்கும்.

 

படவிளக்கம்: (இடமிருந்து) Singer விற்பனை முகாமையாளர், நந்தன விஜேசுந்தர, Singer சிரேஷ்ட உற்பத்தி முகாமையாளர், ஹரண்ய ஹேவாநாயக்க, Singer விற்பனை பணிப்பாளர் ஷனில் பெரேரா, Singer பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன, HNB தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி, காஞ்சன கருணாகம, HNB இன் நுண்நிதி பிரிவு பிரதானி வினோத் பெர்னாண்டோ, HNB லீசிங் பிரிவு பிரதானி, நிலு அமரசிங்க, HNB துணை முகாமையாளர்லீசிங் பிரிவு, ரொஷான் டி சில்வா மற்றும் HNBவர்த்தக மேம்பாடுகள் (லீசிங்) மஹேஷ் ரத்நாயக்க ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

Hot Topics

Related Articles