உலகம்

INSEE Cement நிறுவனத்துக்கு LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் சிறப்பான அங்கீகாரம்

இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE Cement ஆனது LMD சஞ்சிகையால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகத்துறையில் “முகாமையாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட” பதவி நிலைகளிலுள்ள 800 பேரை உள்ளடக்கியவாறு Nielsen நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இத்தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவரையும் இது தொடர்பில் தூண்டாது, நடுநிலைமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி நேர்காணல்கள் வாயிலான இதற்கான புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டதுடன், நேர்காணலில் பங்குகொண்ட அனைவரும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்குமாறு கேட்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள மிகச் சிறந்த 3 நிறுவனங்கள் என அவர்கள் எண்ணும் நிறுவனங்களையும் பெயரிடுமாறு கேட்கப்பட்டிருந்தனர். இலங்கையில் வர்த்தகத்துறையில் மிகவும் நன்மதிப்புப்பெற்ற அங்கீகாரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற LMD சஞ்சிகையின் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்கள் தரப்படுத்தலானது, INSEE Cement நிறுவனத்தின் சந்தை முன்னிலை ஸ்தானத்தை பிரதிபலிக்கின்றது.

INSEE Cement நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கங்களுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் இது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், “இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றாக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை மிகச் சிறந்த தரத்தை நிலைபேண்தகு வழியிலும், நம்பகமாகவும் வழங்குவதில் நாம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைந்துள்ளது. எதிர்காலத்தை சிறந்த வகையில் முகங்கொடுப்பதற்காக நிலைபேண்தகு வழியிலான நிர்மாண நடைமுறைகள், பொறுப்புணர்வுமிக்க வழியிலான கழிவு முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தொழிற்துறைக்கு முன்னோடியாகச் செயற்பட்டு நாம் இவற்றை அடையப்பெறுகின்றோம். எம்முடன் தொடர்புபட்ட தரப்பினர் இதனை நேரடியாக கண்டுள்ளதுடன், எமது முன்னோடி முயற்சிகளில் அங்கம் வகித்து, அதன் விளைவாக அவர்கள் நன்மதிப்புடைய ஒரு நிறுவனமாக எம்மை நோக்குகின்றனர். மேன்மையை நிலைநாட்டுவதில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளினூடாக, சுத்தமான மற்றும் நிலைபேண்தகமை கொண்ட உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்களை நாம் தோற்றுவிப்பதுடன், இவை தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் என்ற நன்மதிப்பினை எமக்கு சம்பாதித்து தந்துள்ளன. எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும், இந்த வாய்ப்பினை எமக்கு வழங்கிய LMD சஞ்சிகைக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

“வாழ்வுக்கான நிர்மாணம்” என்ற பிரதான விழுமியத்தால் INSEE Cement நிறுவனம் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், இத்துறையில் புத்தாக்கத்தினை முன்னெடுத்து, மிகவும் நிலைபேண்தகமை கொண்ட மற்றும் சூழலுக்கு தீங்கற்ற நிர்மாண நடைமுறைகளுடன் தொழிற்துறையை வழிநடாத்திச் சென்று தனது விழுமியங்களை உண்மையில் கட்டிக்காத்து வருகின்றது. அதன் தயாரிப்பு வகையான சங்ஸ்தா சீமெந்து, அதிசிறந்த கலவைச் சீமெந்தாக வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருவதுடன், இது சுற்றுச்சூழலுக்கு தீங்கிளைக்காத சீமெந்தாகக் காணப்படுவதுடன், சாதாரண போர்ட்லன்ட் சீமெந்திற்கு இணையான அல்லது அதை விடவும் கூடுதலான அளவில் அமுக்க வலிமையையும் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் என்ற பாரிய செயற்திட்டத்திற்கு விசேட வகையிலான சீமெந்தை வழங்குவதற்காக இந்நிறுவனம் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கும் அப்பால், இந்த அதிநவீன வியத்தகு செயற்திட்டத்திற்கு உபயோகிக்கப்படுகின்ற கொங்கிரீட் பாகங்களை INSEE Cement வடிவமைத்துள்ளதுடன், மிகவும் கடுமையான சமுத்திர நிலைமைகளின் போதும் இவை குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் எனவும் சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டு உழைப்பு மற்றும் அதன் மூலமாக நிறுவனம் இந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது ஆகியன INSEE Cement நிறுவனத்தின் பலங்களுள் ஒன்றாகக் காணப்படுவதாக குனிக் அவர்கள் கருத்து தெரிவித்ததுடன், “தொழிற்துறையில் இத்தகைய உயர் மட்டத்திலான நன்மதிப்பை நாம் ஈட்டியமைக்கான காரணங்களில் ஒன்றாக இது காணப்படுவதுடன், நாம் எப்போதும் பகிரப்பட்ட அடிப்படையில் முயற்சிகளை முன்னெடுப்பதால் வெளியிலிருந்தும் எமக்கு நற்பெயர் கிடைத்துள்ளது! கூட்டு முயற்சியே வெற்றிக்கான அத்திவாரம் என நாம் உறுதியாக நம்புவதால், எமது போட்டி நிறுவனங்கள் அடங்கலாக, இத்தொழிற்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் எமது அறிவு, நிபுணத்துவம் மற்றும் சாதனைகளை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த வகையில் எமது முயற்சிகள் மற்றும் விழுமியங்களை அனைவரும் கண்கூடாகக் கண்டுகொள்ள முடியும். அனைவரையும் வரவேற்கும் எமது கற்றல் கலாச்சாரம் மற்றும் தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்ற புத்தாக்கம் ஆகியன இயல்பாகவே நிறுவனத்திற்கான நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஸ்தானத்திற்கு எம்மை மேலோங்கச் செய்துள்ளதுடன், இது தொழிற்துறை மற்றும் அரசாங்கம் போன்ற சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் தொழிற்துறையினுள் தராதரங்களை நாம் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகின்றோம். எமது INSEE i2i Innovation Space என்ற புத்தாக்க கூட்டுப்பணியகமானது, அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதை ஊக்குவிக்கும் மேன்மைக்கான மத்தியஸ்தானமாக திகழ்ந்து வருவதுடன், எமது பண்பு மற்றும் விழுமியங்களை மிகவும் நேர்த்தியாகப் பிரதிபலிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.

INSEE Cement அல்லது Siam City Cement (Lanka) Limited, 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் ஒரு உறுப்பு நிறுவனமாகும். INSEE Cement நிறுவனம் INSEE வர்த்தகநாமத்தின் கீழ், சங்ஸ்தா, மகாவலி மெரின், மகாவலி மெரின் பிளஸ், INSEE ரெபிட் ஃபுளோ, INSEE ரெபிட் ஃபுளோ பிளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்ற சீமெந்து வகைகளை தயாரித்து வருகின்றது. இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பு’ INSEE சீமெந்தாகும். இந்த நிறுவனம் இலங்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும்.

 

 

 

Hot Topics

Related Articles