உலகம்

டயலொக் ஆசிஆட்டா மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து

டயலொக் ஆசிஆட்டா மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து டயலொக் டிவி மற்றும் VIU மொபைல் டிவி மூலமாக வழங்கும் இலவச கல்வி அலைவரிசைகள்

இலங்கையை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகினையும் ஆட்டிப் படைத்து வருகின்ற கொவிட்-19 தொற்று நிலைமை நெருக்கடியால் எதிர்காலச் சிற்பிகளான இளம் தலைமுறையின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுவதற்காக இலங்கையின் முன்னணி தொலைதொடர்பாடல் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் இலங்கை கல்வியமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ் டயலொக் டிவி மற்றும் VIU மொபைல் டிவி ஆகியவற்றின் மூலமாக கல்வி சார்ந்த 10 அலைவரிசைகள் இலவசமாக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன.

இதன் முதற்கட்டமாக செப்டெம்பர் 7 ஆம் திகதியன்று நான்கு அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வெகுவிரையில் இது பத்து அலைவரிசைகளாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த அலைவரிசைகள் டயலொக் டிவி செய்மதி அலைவரிசை இணைப்பினூடாகக் கிடைக்கப்பெறுவதுடன், எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய VIU மொபைல் டிவி app மூலமாகவும் இலவசமாகக் கிடைக்கப்பெறுகின்றன. இந்த அலைவரிசைகளுக்கான பாட உள்ளடக்கங்கள் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றால் தேசிய பாடவிதானத்திற்கு அமைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் சவால்மிக்க இத்தகையதொரு காலகட்டத்தில் இலவச கல்வியை ஊக்குவித்து வருகின்ற இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் தங்குதடையின்றி தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம வாய்ப்பளிக்கப்படல் வேண்டும் என்பதில் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் தீவிரமான அர்ப்பணிப்புடன் உள்ளது. தற்சமயம் இந்த ஏற்பாட்டின் கீழ் நெனச சாதாரண தரம் மற்றும் நெனச உயர் தரம் என நான்கு அலைவரிசைகள் முறையே சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கப்பெறுகின்றன. மிகவும் புத்தாக்கமான வழிமுறைகளில் முன்னெடுக்கப்படுகின்ற கல்விப் போதனை செயற்பாடுகளை மாணவர்கள் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக மாணவர்களிடம் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் தரவுக்கட்டணம் எதையும் அறவிடாது மாணவர்களுக்கு இக்கட்டான காலத்தில் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கல்வித்துறையில் புதியதொரு அத்தியாயமாக மாறியுள்ள இந்த முயற்சிக்கு முன்வந்து உதவியுள்ள டயலொக் நிறுவனத்தின் பணியால் நாட்டின் கல்வித்துறை பாரிய வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் துளியளவும் சந்தேகம் கிடையாது. இன்றைய மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக மாறவுள்ள நிலையில் அவர்களுக்கு அறிவூட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பிற்கு டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் ஏற்கனவே நாடளாவியரீதியில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நெனச டிவி, நெனச ஸ்மார்ட் ஸ்கூல், நெனச செயலி மற்றும் கட்டணமின்றிய 1916 உதவிச் சேவை இலக்கம் என பல்வேறுபட்ட கல்வித்தளங்களை இந்நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் பிரயாணத் தடைகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்து விடாது, அவர்கள் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டு இணைய வழியில் தமது பாடசாலை கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதற்காக 100,000 மாணவர்களுக்கு தரவு புலமைப்பரிசில்களையும் இது தற்போது வழங்கி வருகின்றது.

 

 

Hot Topics

Related Articles