உலகம்

விவசாய துறையின் முன்னேற்றத்திற்காக, நுண்நிதித் துறையில் அதிக கவனம் செலுத்தும் HNB

( HNB இன் நுண்நிதிப் பிரிவின் பிரதானி வினோத் பெர்னாண்டோ)

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, விவசாயத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் அதன் நுண்நிதித் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது.

சிறந்த வாடிக்கையாளர் சேவை திட்டங்கள் மற்றும் மூலோபாய செயல்பாடுகள் மூலம் HNB அதன் பரந்த அளவிலான நுண் நிதி சேவைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. HNBன் ‘கெமி புபுதுவ’ திட்டத்தின் மூலம் இந்த புதிய முயற்சிகள் கிராம அளவிலான தொழில்முனைவோருக்கு நெருக்கமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், HNB தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் வங்கி சேவைகளை நுண் நிதி வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது.

‘கொவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள்வதற்கு நுண்நிதி வாடிக்கையாளர்களுக்கு உதவ நிதி மற்றும் கூடுதல் உதவியை நாடும் இந்த புதிய நடவடிக்கைகள் தங்களுக்கு ஆதரவளிக்குமென நாங்கள் நம்புகிறோம்.’ என நுண்நிதி பிரிவின் பிரதானி வினோத் பெர்னாண்டோ கூறினார். ‘ HNB, நுண்நிதி துறைக்கு எங்கள் பங்களிப்பு மற்றும் சலுகைகளை மேலும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்,’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று, வங்கியின் மொத்த நுண்நிதி சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத் துறையில் சார்ந்தது. கணிசமான எண்ணிக்கையிலான ‘கெமி புபுதுவ’ தொழில்முனைவோர் இதன் மூலம் பயனடைகின்றனர். HNB, 2021 இறுதிக்குள் விவசாயத்துறையில் தமது பங்கை அதிகரிக்க விரும்புகிறது. இது தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த மூலதன நிதி உதவி வழங்கவும் மற்றும் விவசாய தொழில்முனைவோருக்கு அவர்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு நுண்நிதிச் சலுகைகளைப் பெற உதவுகிறது.

வங்கியின் வெற்றிகரமான நுண்நிதித் திட்டமான ‘கெமி புபுதுவ’வின் கீழ் புதிய சேவைகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாக நிலையான ஒரு திட்டமாகத் தக்கவைப்பதற்காகவும் இந்த திட்டத்தை வகுத்துள்ளது.

விவசாயத்திற்கு அப்பால், ஏனைய துறைகளில் உள்ள நுண்நிதி வாடிக்கையாளர்களும் HNBஇன் சமீபத்திய தொடர் நுண்நிதி சலுகைகளால் பயனடைகிறார்கள். வங்கி அண்மையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது (விவசாயத் துறைக்கு Micro -லீசிங் போன்றது) திறன்களை மேம்படுத்துவதற்கும் மற்றும் நுண்நிதித் துறையின் மேம்பாட்டிற்காக வாடிக்கையாளர் திறனை வளர்க்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

மேலும், வங்கி டிஜிட்டல் வங்கி சேவைகளை (மொபைல் மற்றும் இணைய வங்கி போன்றவை) அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. மேலும், இது சிறப்புத் திட்டங்கள் மூலம் சேமிப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தது மற்றும் நுண்நிதி மற்றும் குறைந்த விலை நிதி, குறிப்பாக விவசாயத் துறைக்கு கவனம் செலுத்தியது.

மார்ச் 2021இல் HNBஆல் ஆரம்பிக்கப்பட்ட நுண்நிதி லீசிங் வசதியின் கீழ் 800க்கும் மேற்பட்ட சேவைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. வங்கியின் லீசிங் மற்றும் நுண்கடன் பிரிவு இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்துவதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆதரவை வழங்கி அதிக சலுகையை வழங்க ஒத்துழைத்தது. வாடிக்கையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பு எங்கள் சேவைகளின் வெற்றியை பிரதிபலிக்கிறது.

 

 

Hot Topics

Related Articles