உலகம்

கட்டணம் செலுத்துவதை வலுப்படுத்துதல் மற்றும் பயோமெட்ரிக் அம்சங்கள் அடங்கிய SOLO சேவை வசதிகளை மேம்படுத்தும் HNB

 

இலங்கைக்குள் டிஜிட்டல் வங்கி செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக HNB முன்னெடுக்கும் முயற்சிகளின் மற்றுமொரு விசேட மைல்கல்லான தமது முதன்மை மொபைல் தொலைபேசி கட்டணம் செலுத்தும் செயலியான HNB SOLO தொடர்பில் புதிய கட்டணம் செலுத்தும் திறன் மற்றும் பயோமெட்ரிக் அம்சங்களை உள்ளடக்குவதன் மூலம் அந்த சேவையை மேலும் மேம்படுத்தியுள்ளது.

HNB SOLO செயலியின் இந்த சமீபத்திய மேம்பாட்டின் மூலம், வங்கிப் பாவனையாளர்களுக்கு குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்கள் முதல் தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் இன்டர்நெட் கட்டணங்கள், மற்றும் SOLO மூலம் காப்புறுதிதத் தவணைகள் ஆகியவற்றை விரைவாகவும் எளிதாகவும் செலுத்தும் திறனை வழங்குகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமன்ன, ‘தற்போதைய சூழலில் வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள எளிதான மற்றும் பாதுகாப்பான கட்டண முறையை வழங்குவது அவசியம். இந்த பங்கை நிறைவேற்றுவதற்காக SOLO மிக எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை அனுபவிக்க அல்லது டிஜிட்டல் மற்றும் QR குறியீடுகளின் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கு SOLO உடன் இணைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களில் விரைவான அதிகரிப்பை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

கட்டணம் செலுத்துகையில் எமது புதிய அம்சங்களை உள்ளடக்கியதுடன், SOLOவை பாவனையாளர்கள் தேர்வு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கு இலகுவாக்குவதற்காகவும் நாங்கள் அதிகமான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். அதுபோலவே நிதி நிர்வாகம் குறித்து என்றுமில்லாத வாறு புதிய அனுபவத்தையும் அதனுடன் அவர்களுக்கு வழங்குகின்றோம். இது HNB SOLOஇன் புதிய விசேட மைல்கல்லாக அமைவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும் எடுக்கும் முக்கியமான எதிர்கால நடவடிக்கையாகவும் கருத முடியும்.’ என அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மேம்பாடுகளில் பயோமெட்ரிக் பாதுகாப்பு அமைப்பு அடங்கும். பாவனையாளர்களுக்கு, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் கைரேகை சரிபார்ப்பு தீர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன, கூடுதலாக வாடிக்கையாளரின் விருப்பப்படி பயன்படுத்தக்கூடிய நான்கு இலக்க கடவுச்சொல் தேர்வும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

தினசரி அடிப்படையில் தங்கள் கணக்கில் இருந்து வெளியேற விரும்பாத வாடிக்கையாளர்கள் 60 நாட்கள் தங்குவதற்கான விருப்பத்தையும் வங்கி வழங்குகிறது. இந்த SOLO செயலி HNB வாடிக்கையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்படாததால், எவரும் தங்கள் சேமிப்பு/நடப்புக் கணக்கு மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பதிவு செய்து SOLOல் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கலாம்.

Hot Topics

Related Articles