உலகம்

உபெர், யுனெஸ்கோ மற்றும் கல்வியமைச்சின் கூட்டாண்மையுடன் தடுப்பூசி ஏற்றச் செல்கின்ற ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கு பிரயாண வசதிகள்

மேற்கு மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 25,000 சவாரிகளை வழங்க உபெர், யுனெஸ்கோ மற்றும் கல்வியமைச்சு ஆகியன தனித்துவமான ஒரு கூட்டாண்மையுடன் கைகோர்த்துள்ளன. இந்த சவாரிகள் கொவிட் தொடர்பற்ற மருத்துவ சேவைகளைப் பெறும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம்.

 

உபெர் இந்த சவாரிகளை ஒரு தனித்துவமான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய சலுகைக் குறியீட்டின் மூலம் முன்னெடுத்து வழங்குகிறது. ஒவ்வொரு நபரும் இரு முறை தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்காக தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்குச் சென்று வருவதற்கு நான்கு இலவச சவாரிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு சவாரியின் போது பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச சலுகை பெறுமானம் ரூபா 300 ஆகும். மேலும் இந்த சலுகை 2021 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.

 

உலகளவில் 1.6 பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளையோர் கொவிட்-19 சுகாதார நெருக்கடியால் 2020 ஆம் ஆண்டில் பல மாதங்களாக பாடசாலைக்குச் செல்ல இயலவில்லை. தொற்றுநோய் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், கற்றலில் கொவிட்-19 இன் தாக்கத்தை தணிவிக்கத் தேவையான, குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவைப்படுகின்ற தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கங்களை இந்த தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது.

 

தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மாணவர்களின் நலனுக்காக பாடசாலைகளை விரைவாக மீண்டும் திறப்பதற்கு உதவுவார்கள்.

 

கல்விக்கான உரிமை மீது யுனெஸ்கோவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய, இலங்கை, இந்தியா, பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியான எரிக் ஃபால்ட் அவர்கள், தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு பாதுகாப்பாகச் சென்று வருவதில் காணப்படும் முட்டுக்கட்டைகளை அகற்றும் ஒரு உலகளாவிய முயற்சிக்கு பங்களிப்பதற்காக உபெர் உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சி என்பதுடன், மற்றும் தொற்றுநோயின் தற்போதைய அலையிலிருந்து நாடு மீண்டு வருகின்ற நிலையில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி கட்டமைப்பில் உள்ள ஏனையவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்யும். இதுவகுப்பறை நேரடி கற்றல் நடவடிக்கைகளுக்கு திரும்புவதற்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பதை துரிதப்படுத்தும் என்று நம்புகிறோம். மேலும் ஆசிரியர்கள், அவர்களைச் சார்ந்துள்ள சமூகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.

 

இந்த கூட்டாண்மை குறித்து, உபெர் தெற்காசியாவின் தலைமை அதிகாரியான பிரப்ஜீத் சிங் அவர்கள் கருத்து வெளியிடுகையில், யுனெஸ்கோவுடனான எமது உலகளாவிய கூட்டாண்மையை இலங்கைக்கும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஏனையோருக்கு தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளுக்கு பிரயாணிப்பதற்கு உதவும் என்பதுடன், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குச் சென்று தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர உதவும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பிரயாண வசதி ஒரு தடை இல்லை என்பதை உறுதி செய்வதில் உபெர் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது, இதன் மூலம் உயிர்களை காப்பாற்றவும், சிறப்பான முறையில் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

 

அதன் உலகளாவிய கல்வி கூட்டணியின் அங்கத்தவராக (member), உபெர் நிறுவனம் யுனெஸ்கோ மற்றும் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து கொவிட்-19 இன் முதல் அலையின் போது கல்விக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டு உழைத்திருந்தது. உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான போக்குவரத்து முட்டுக்கட்டைகளை அகற்றும் நோக்கத்துடன், யுனெஸ்கோவிற்கு 1 மில்லியன் இலவச சவாரிகளை (1 Million free rides to UNESCO) வழங்குவதாக மார்ச்சில் உறுதிமொழியளித்திருந்தது. இலங்கையில் யுனெஸ்கோவிற்கு உபெரின் 25,000 இலவச சவாரிகள் இந்த 1 மில்லியன் சவாரி என்ற உலகளாவிய உறுதிமொழியின் ஒரு பகுதியாகும்.

 

இலங்கையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பாடசாலை ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் முயற்சிகளை ஆதரிப்பதற்குப் புறம்பாக, இந்த இலவச சவாரிகள் இந்த சவாலான காலங்களில் உபெரின் தளமேடையில் உள்ள ஓட்டுனர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் மேலும் அதிகரிக்கும்.

 

 

 

 

 

Hot Topics

Related Articles