உலகம்

சிறிய நடுத்தரளவு வியாபார முயற்சிகளின் வளர்ச்சிக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்களிப்பு

இலங்கையில் 70 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் சிறிய நடுத்தரளவு வியாபாரங்களில் தொழில்புரிவதுடன், நாட்டின் தொழிற்துறையில் மூன்றில் ஒரு பங்கை தன்வசம் கொண்டுள்ளதுடன், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குகின்றது.

அத்துடன், கொவிட்-19 தொற்றுப் பரவல் மத்தியில், சந்தை தடங்கல்கள் காரணமாக பல்வேறு சவால்களுக்கு சிறிய நடுத்தரளவு வியாபார முயற்சிகள் முகங்கொடுத்துள்ளன. இதன் பின்புலத்தில், பொறுப்பு வாய்ந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், இந்தத் துறையுடன் கைகோர்த்து நீண்ட கால சுபீட்சத்துக்கு உதவியளிக்க நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி முன்வந்துள்ளது.

 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வணிக வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் அரோஷ லியனாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “சிறிய நடுத்தரளவு தொழில் துறைக்கு ஆதரவளிக்க நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி முன்வந்துள்ளதுடன், நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிப் பயணத்துக்கு பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளன.

மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதித் தீர்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன வங்கியியல் தீர்வுகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்றவற்றை நாம் பயன்படுத்தி, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறையை மேம்படுத்த அவசியமான நிதி முகாமைத்துவ தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றோம்.” என்றார்.

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறைக்கான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தீர்வுகள், ஒவ்வொரு வியாபாரத்துக்கும் பெறுமதி சேர்த்து, தேசிய பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமாக இயங்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வியாபார நடவடிக்கைகளின் வெவ்வேறு கட்டங்களின் குறித்த தேவைகளின் பிரகாரம், தொடர்ச்சியான நிபுணத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும், பல்வேறு நிதித் தீர்வுகளையும் வழங்கி சிறிய நடுத்தரளவு வியாபார முயற்சிகளுடன் நெருக்கமாக வங்கி செயலாற்றுகின்றது.

தமது நிர்வாக பணிகளை ஒழுங்கமைப்பு செய்வதற்கு அவசியமான வினைத்திறன் மேம்படுத்தல் சாதனங்கள் இதில் அடங்கியுள்ளதுடன், அதனூடாக மிருதுவான மற்றும் வினைத்திறனான பணிப்பாய்ச்சல்கள் உறுதி செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு தமது பிரதான வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உதவியாக அமைந்திருக்கும்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் திரள்வு தீர்வுகளினூடாக வியாபாரங்களுக்கு அதன் பணமீட்டும் நடவடிக்கைளை சீரமைத்துக் கொள்ள, வியாபாரத்தில் வினைத்திறனை மேம்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருப்பதுடன், சகல நிதிச் செயற்பாடுகள் தொடர்பான தரவுக் கட்டமைப்பொன்றை கட்டியெழுப்பி நிதிசார் தகவல்களை இலகுவாக பிரித்தெடுத்து, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளை வினைத்திறன் வாய்ந்தவையாக மாற்றியமைத்துக் கொள்ளவும், அவசியமான நிதித் தகவல்களுடன் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல்களை பேணக்கூடிய பிரிவாகவும் திகழச் செய்துள்ளது. நிறுவனங்களுக்கு தமது ERP கட்டமைப்புகளை வங்கியின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளுடன் ஒன்றிணைத்துக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.

லியனாரச்சி தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது தீர்வுகள் மற்றும் சேவைகளினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு தந்திரோபாயமாகவும் வினைத்திறனான முறையிலும் தமது தொழிற்படு மூலதனம் மற்றும் திரள்வு முகாமைத்துவத்தை டிஜிட்டல் யுகத்தில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் ஆலோசனை சேவைகளில் பாரிய கூட்டாண்மை நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது, வழிகாட்டல் மற்றும் ஒப்பற்ற திட்டமிடல், சம்பந்தப்பட்ட பன்முகப்படுத்தல், மூலதன வலிமைப்படுத்தல், நீண்ட கால திட்டமிடல் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகளுக்கு ஏற்றுமதி சந்தைகளை அணுகுவது போன்றன அடங்கியுள்ளன.” என்றார்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரகாரம், மூலதனத்தை சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு மாற்றி, அடுத்த நிலைக்கு அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள இலக்காக அமைந்திருப்பதுடன், அதனூடாக, உற்பத்தி பொருளாதாரத்தை மேலும் வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மறுபுறத்தில் விறுவிறுப்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ள இது உதவியாக அமைந்திருப்பதுடன், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகளுடன் வங்கி தன்னை ஈடுபடுத்தி, ஒவ்வொரு வியாபாரத்தையும் கட்டியெழுப்புவதற்கும், வெளிநாட்டு சந்தைகளில் பிரவேசிப்பதற்கும் உதவியாக அமைந்துள்ளது.

சிறந்த வினைத்திறனுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதற்கு சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சிகளுக்கு வங்கியால் உதவிகள் வழங்கப்படுவதுடன், தொற்றுப் பரவலுக்கு பின்னரான சிறந்த தீர்மானமெடுத்தல்களில், நுகர்வோர் தெரிவுகள், செலவு முகாமைத்தவம் மற்றும் தரவுகளை தயாரிப்பது போன்றன அடங்கியுள்ளன.

நவீன வசதிகள் படைத்த டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பு என்பதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு அடுத்த கட்ட வினைத்திறனை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாட்டில் மாபெரும் கடனட்டை விற்பனை நிலைய வலையமைப்பை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தன்வசம் கொண்டுள்ளதுடன், இதனூடாக சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு அனுகூலம் கிடைக்கும்.

 

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ Business Today சஞ்சிகை தரவரிசையில் இலங்கையின் முதல் 15 வணிக நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. “மக்கள் மற்றும் வணிகங்களது குறிக்கோள்களையும் அபிலாஷைகளையும் ஒரு நிலையான வழியில் அடைவதற்கு நிதி சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவது” என்ற நோக்கத்தில் பயணிக்கும் வங்கி; தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறை, நிதி தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குகிறது.

அதிநவீன டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் வலுவூட்டலில் கவனம் செலுத்திய வங்கி, பல புதுமையான வாடிக்கையாளர் மைய வங்கி தீர்வுகளான, நீட்டிக்கப்பட்ட வங்கி நேரம், 365 நாள் வங்கி மற்றும் FriMi – இலங்கையின் முதல் டிஜிட்டல் வங்கி அனுபவம் போன்றவற்றில் முன்னோடியாக உள்ளது.

உன்னத மதிப்பு, சேவை வழங்குதல் மற்றும் அட்டை பாவனையாளர்களை பலனளிக்கும் அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைக்கும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கான ஒரே சேவை வழங்குநராகும். நாடு முழுவதும் 96 கிளைகளை இயக்குகிற நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி 48 CDM இயந்திரங்களை உள்ளடக்கிய 127 இடங்களில் அமைந்துள்ள ATM வலையமைப்பையும், Lanka Pay வலையமைப்பின் ஊடாக 3,700 க்கும் மேற்பட்ட ATM களையும் கொண்டுள்ளது.

 

 

Hot Topics

Related Articles