உலகம்

“கட்டுநாயக்க விமான நிலையம் தாக்குதல் தொடர்பான மின்னஞ்சல் போலியானது” – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அரச கட்டடங்கள் தாக்கப்படலாம் என விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் போலியானது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த போலி அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஊடாக தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி விமான நிலையம் மற்றும் அரச நிறுவனங்கள் தாக்கப்படலாம் என்று குறித்த மின்னஞ்சலில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள நால்வர் விடுவிக்கப்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதாக மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பாக அரச புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்தார்.

Hot Topics

Related Articles