உலகம்

இலங்கையில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

இலங்கையில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் பரவரை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 21 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Hot Topics

Related Articles