உலகம்

ஆப்கன் மக்களின் துயர் துடைக்க உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி!

ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்குகடுமையான உணவுப்பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல்விமான நிலையம் மற்றும் ஆப்கன் – பாக்., எல்லை ஆகியவற்றில் கூடிஉள்ளனர்.

இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துஉள்ளனர்.இவர்களுக்கு உணவு, குடிநீர் தங்கும் முகாம்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது குறித்து ஆராய ஐ.நா., சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஆப்கனில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா., அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாகவும்.

இது தவிர, ஆப்கன் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளதாகவும் , ஐ.நா., மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண துறையின் துணை பொதுச் செயலர் மார்டின் கிரிப்பித் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles