உலகம்

இலங்கையில் ஊரடங்கு குறித்து இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிப்பதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles