உலகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் (13) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்த தொடரின் முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரின்போது இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளார்.

இதேவேளளை குறித்த அறிக்கை மீதான உறுப்பு நாடுகளின் விவாதம் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles