உலகம்

மகாகவி பாரதியார் நினைவு தினத்தில் நிலவும் முரண்பாடு!

மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .

நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.

ஆனால், சென்னை மாநகராட்சியின் இறப்பு சான்றிதழில், செப்., 12ல் பாரதியார் இறந்ததார் என குறிப்பிடப்படுகிறது.

இது குறித்து, பாரதி ஆய்வாளரான ச.சுப்பு ரெத்தினம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.

பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக திகதியை மாற்ற முயன்றனர். இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்-., 12 என்று திருத்தம் செய்யப்பட்டது.

அப்போது முதல், செப்., 12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை, தமிழக அரசு அனுசரித்து வருகிறது.

எனினுமு் பாரதியாருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில், செப்., 11 ‘மகாகவி நாள்’ என்று அனுசரிக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்

இதையே, பள்ளி பாட புத்தகங்கள், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பிற அரசு தேர்வர்களும் படித்து வருகின்றனர்.

இவ்வரலாற்று பிழையை அரசு திருத்தம் செய்து, அதிகாரப்பூர்வ ஆணை வெளியிடவேண்டும் என கோவை பாரதியார் பல்கலை, பாரதியார் உயராய்வு மைய இயக்குனர் சித்ரா தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hot Topics

Related Articles