உலகம்

போலந்தில் நிர்வாணமாக கடைகளுக்கு சென்று மது கொள்வனவில் ஈடுபட்ட வழக்கறிஞர்!

போலந்து வழக்கறிஞர் ஒருவர் குடிபோதையில் நிர்வாணமாக கடைகளுக்கு சென்று மது போத்தல்களை கொள்வனவு செய்ய முயன்றுள்ளார்.

இது தொடர்பான வினோதமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாசிஜ் டபிள்யூ என அடையாளம் காணப்பட்ட 38 வயதான குறித்த வழக்கறிஞர், ஸ்விட்னிகாவில் உள்ள ஒரு கடையில் மதுபான வாங்க முயன்றுள்ளார்.

The 38-year-old man was spotted by stunned fellow shoppers in the town of Swidnica in southwest Poland

ஒரு புகைப்படத்தில், குறித்த வழக்கறிஞர், நான்கு பேக் பீர்களை எடுத்து கொண்டு பணம் செலுத்தும் இடத்திற்கு நடந்து செல்வதைக் காணலாம்.

இன்னொரு படத்தில் மதுபோத்தல்களுக்கு பணம் கொடுப்பதை காட்டுகிறார்.
போலந்தில் உள்ள ஸ்விட்னிகா நகரில் ஒரு மதிப்பு மிக்க மாவட்ட வழக்கறிஞராக இவர் உள்ளார்.

அவர் அநாகரிகமான முறையில் நிர்வாணமாக தெருக்களில் அலைந்ததை தொடர்ந்து பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Hot Topics

Related Articles