உலகம்

தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிரிழக்கும் அபாயம் 11 மடங்கு குறைவு!

கொவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்தற்கான அபாயம்  11 மடங்கு குறைவு,” என, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் மேற் கொண்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வாய்ப்பு 10 மடங்கு குறைவு என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய பணிப்பாளர் ரோச்சல்லா வெலன்க்சி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் மாறுபாடான டெல்டா வைரஸால் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன.

உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக கொவிட் தடுப்பூசி தமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுப்படுத்தியுள்ளன.

Hot Topics

Related Articles