உலகம்

ஓய்வூதியத் தொகையை பெறுவதற்கா உயிரிழந்த தாயின் சடலத்தை ஒரு வருடமாக மறைத்து வைத்த நபர்!

ஆஸ்திரியவில் தாயின் ஓய்வூதியத் தொகையை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக உயிரிழந்த தனது தாயின் சடலத்தை மம்மியாக்கி ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டின் அடித்தளத்தில் வைத்திருந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

89 வயதான பெண் ஜூன் 2020 இல் இயற்கையான காரணங்களால் இறந்ததாக நம்பப்படுகிறது.

அவருடைய மகன் அவரின் உடலை வீட்டின் அடித்தளத்திற்கு இழுத்துச் சென்று  மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

உடலில் இருந்து வரும் துர் நாற்றத்தை மறைக்க ஐஸ் கட்டிகள், துணிகள் மற்றும் பூனையின் கழிவுகளை பயன்படுத்தியதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தபால்காரருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர் போலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

எனினும் விசாரனைகளின் பின்ன குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் அவர் மீது மோசடி மற்றும் ஒரு சடலத்தை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர்.

Hot Topics

Related Articles